F: Anbendra mazhaiyile agilangal nanaiyave
adhiroopan thondrinaane
vaikkolin meloru vairamaai vairamaai
vandhavan minninaane,
vinmeengal kanpaarkka sooriyan thondrumo
pugazhmaindhan thondrinaane,
kanneerin kaayaththai senneeril aatrave
sisubaalan thondrinaane,
F: anbendra mazhaiyile agilangal nanaiyave
adhiroopan thondrinaane adhiroopan thondrinaane
porkonda boomiyil pookkaadu kaanave
pugazhmainthan thondrinaane
pugazhmainthan thondrinaane
F: kalvaari malaiyile kallonru pookkavum
karunaimagan thondrinaane,
nootraandu iravinai nodiyodu pokkidum
oliyaaga thondrinaane,
irumbaana nenjilum eerangal kasiyave
iraibaalan thondrinaane,
mutkaadu engilum pookkaadu pookkave
puviraajan thondrinaane,
F: anbendra mazhaiyile agilangal nanaiyave
adhiroopan thondrinaane
vaikkolin meloru vairamaai vairamaai
vandhavan minninaane,
F: anbendra mazhaiyile agilangal nanaiyave
adhiroopan thondrinaane adhiroopan thondrinaane
vaikkolin meloru vairamaai vairamaai
vandhavan minninaane
vandhavan minninaane.....
---------------------------------------------------------------------------------------------------
பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே,
பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே,
பெ: கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே,
பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே,
பெ: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே......